வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, பல மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவுப்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More : அசைவப் பிரியர்களே உஷார்..!! மீன் சாப்பிட்டதும் இந்த 5 உணவுகளைத் தொட்டால் என்ன ஆகும் தெரியுமா..?



