FLASH | இன்னும் சற்று நேரத்தில்..!! கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்..!! தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

ramadass 2025

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த சஸ்பென்ஸ் இன்னும் சற்று நேரத்தில் உடையவுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது இறுதி முடிவை அறிவிக்கத் தயாராகி வரும் சூழலில், கள நிலவரங்கள் அதிரடியான திருப்பங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.


நேற்று அன்புமணி ராமதாஸுக்கு எதிராகத் தொடரப்பட்ட சின்னம் தொடர்பான வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டது. இந்த நகர்வு, பாமக மீண்டும் அதிமுக முகாமுக்கு திரும்பப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக யூகங்கள் சிறகடித்த நிலையில், இன்று காலை வெளியான ஒரு காட்சி ஒட்டுமொத்தப் பார்வையும் திசை திருப்பியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுகள் பலமாக அடிபட்டுக் கொண்டிருந்த வேளையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தேர்தல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அந்த அலுவலக முகப்பில் கட்டப்பட்டுள்ள தேர்தல் தோரணங்களில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் புகைப்படங்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. கூட்டணி உறுதி செய்யப்படாமல் ஒரு கட்சியின் தலைவர்கள் புகைப்படம் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், பாமக மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்கிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பாஜக அலுவலக தோரணங்களில் இடம் பெற்றுள்ள இந்தப் புகைப்படங்கள், அதிமுக தொண்டர்களிடையே ஏமாற்றத்தையும், பாஜக மற்றும் பாமக விசுவாசிகள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சின்னம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்ட கையோடு, டெல்லி தலைமையுடன் இணக்கமான சூழல் எட்டப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது. எனவே, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகியுள்ளது.

Read More : தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது..? வெளியாகிறது அதிகாரப்பூர்வ தேதி..!! பரபரப்பு தகவல்..!!

CHELLA

Next Post

பதற்றம்.. பரபரப்பு..!! அதிமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்..!! திண்டுக்கல்லில் பயங்கரம்..!!

Sat Feb 28 , 2026
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை அடுத்த பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருதமுத்து (எ) முத்தன் (42), செங்கல் சூளை அதிபரான இவர், அதிமுகவில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மருதமுத்து […]
Crime 2025

You May Like