Flash : இன்று ஒரே நாளில் 2 முறை உயர்வு..! எவ்வளவு தெரியுமா? மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!

Gold prices

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது..

அந்த வகையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.. இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனையானது.. அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.2.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலையும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று மாலை ரூ.80 அதிகரித்து ரூ.12,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், மாலையும் ரூ.640 உயர்ந்து ரூ.1,02,080க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.8 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1 உயர்ந்து ரூ.266க்கு விற்பனையாகிறது.. இதனால் இன்று காலை கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,000 உயர்ந்து ரூ.2.66 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது..

RUPA

Next Post

சென்னையில் நாளை முதல் அமல்..! காலி மது பாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ.10 தரப்படும்..!

Mon Jan 5 , 2026
டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.. அதன்படி, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்த மதுபான பாட்டில் வாங்கிவிட்டு காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலி மது பாட்டிலகளை […]
empty bottle tasmac 1

You May Like