சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரி அருகே சதுர்வேதமங்கலம் ருத்திரகோடீஸ்வர் கோயிலின் மாசி மகம் பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 10-ம் நாளான இன்று உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது..
இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிங்கம்புணர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளை பங்கேற்றன..
இந்த போட்டியில் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.. முதலில் கோவில் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.. பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 75 பேர் காயமடைந்தனர்.
இதில் படுகாயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக சிங்கம்புணரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. மாடு முட்டியதில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஐஸ் விற்பனை செய்த ஜம்முலால் லால்ஜி, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ராமநாதன், புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



