தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தியின் முக்கிய மையமான நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதியின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தியின் குறைவு போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சமீப காலமாக ஏற்றுமதி அதிகரித்திருப்பதாலும், அதேசமயம் உற்பத்தி எதிர்பார்த்த அளவு இல்லாததாலும் முட்டையின் பண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு முட்டையின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.6 ரூபாய் 20 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாகத் தினமும் சராசரியாக 5 காசுகள் வரை விலை அதிகரித்து வருவதாக NECC அறிவித்துள்ளது.
வரலாறு காணாத வகையில் முட்டை விலை உயர்ந்துள்ளதால், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூ.8 ரூபாய் வரை விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வு சாமானிய மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : FLASH | கூண்டோடு ராஜினாமா..!! தவெகவில் இணைந்த 500 பேர்..!! கதிகலங்கி போன திமுக, அதிமுக..!!



