மோந்தா (Montha) புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தற்போது வரை மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எந்தவிதமான விடுமுறை அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், பள்ளிக்குச் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிவெடுத்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



