FLASH | மீண்டும் மீண்டும் அட்டூழியம்..!! மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!! படகுகளும் பறிமுதல்..!!

Fisherman 2026

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், மீண்டும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கடலோரக் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இந்த மீனவர்கள், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர்.


மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படை, கைதான 9 பேரையும் மேலதிக விசாரணைக்காக காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் தான் நெடுந்தீவு அருகே காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு கைது நடவடிக்கை அரங்கேறியிருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மீனவ அமைப்புகள், “நாள்தோறும் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிருக்கு அஞ்சியே தொழில் செய்ய வேண்டியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

Read More : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கியில் வேலை..!! ஆரம்ப சம்பளமே ரூ.37,000..!! ஃபெடரல் வங்கி அதிரடி அறிவிப்பு..!!

CHELLA

Next Post

குழந்தைகளுடன் தூங்கிய மனைவி..!! மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொன்ற கணவன்..!! வேலூரில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!

Sat Jan 3 , 2026
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மின்சாரம் பாய்ச்சிப் படுகொலை செய்த கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (43), டயர் கடை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், மதுவுக்கு அடிமையானதுடன், வீட்டில் […]
Crime 2026 1

You May Like