Flash : ஒரே நாளில் ரூ.5,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Gold jewellery 1 1

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்து, ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2.65 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : “விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீங்க”..!! ஸ்மார்ட்போன் வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..!!

RUPA

Next Post

தங்கம் குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு..! நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமா..?

Wed Feb 18 , 2026
இந்தியாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கும் இடையே முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கு எந்த வரிச் சலுகைகளையும் வழங்க இந்தியா தயாராக இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்துடனான முந்தைய வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விலைமதிப்பற்ற உலோகங்கள் வர்த்தகம் குறித்து […]
jewel n

You May Like