2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதன்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.. இந்த வார தொடக்கத்தில் தங்கம் சிறிதளவு குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு செய்யப்படுகிறது.. இன்று நகைப்பிரியர்கள் மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.8,உயர்ந்து ரூ.207க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.2,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!



