Flash : தனிக்கட்சி தொடக்கமா? எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்..! பரபரக்கும் அரசியல் களம்..!

ops 1

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறும்.. கழகப் பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதி.. இது தான் கழகத்தின் சட்டவிதி.. இந்த சட்டவிதியை யாராலும் திருத்தம் செய்யக் கூடாது, மாற்றக் கூடாது என்று எம்.ஜி.ஆர் சட்டப்பிரிவை சேர்த்திருந்தார்.. ஆனால் இந்த சட்ட விதியை திருத்தம் செய்துள்ளனர்..


இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.. இது தொடர்பான 6 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.. இந்த வழக்கில் நாங்கள் அதிமுக சட்ட விதிகளை குறிப்பிட்டு வாதாடி வருகிறோம்.. எங்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்..

அதிமுக தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை பறிக்கப்பட்டுள்ளது.. இதை எதிர்த்து போராடி வருகிறோம்.. எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை..” என்று தெரிவித்தார்..

Read More : எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் – பிரதமர் மோடி புகழாரம்..!

RUPA

Next Post

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..! சீறிப் பாயந்த அண்ணாமலை காளை வெற்றி..! சிதறி ஓடிய வீரர்கள்..!

Sat Jan 17 , 2026
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
annamalai jallikattu 2

You May Like