சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும், தனது சகோதரரை சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவுக்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில், குறிப்பாக அவர் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில், அவரை வழிநடத்திய முக்கிய நபர்களில் சத்யநாராயணாவும் ஒருவர். தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சத்யநாராயணா ராவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் உடல்நிலை சீரியஸாக இருப்பதை அறிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் தனது அனைத்து வேலைகளையும் ரத்து செய்துவிட்டு, தனது சகோதரரை நேரடியாக சந்திக்க பெங்களூருவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், சத்யநாராயணா ராவ் விரைவில் உடல்நலம் சரியாகி வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



