மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் தலைவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர்.. தமிழக பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.. தனது 80 வயதிலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், போராட்டங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மாநிலங்களவை எம்.பியாக இருந்த வைகோவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.. எனவே அவர் தற்போது கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் வைகோ காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.. சிகிச்சை முடிந்து அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும் பல அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.. காய்ச்சல் இருந்தால் சுய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.. மேலும் காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை உடன் நடந்த் கொள்ள வேண்டும் எனவும் குறைந்தபட்ச சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..