Flash : தமிழ்நாடு தலைமை செயலாளர் அதிரடி மாற்றம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..!

tn govt 20251 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.


ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.. சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி சந்தீப் ராய் ரத்தோரை நியமித்தது. அதன்படி அவர் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார்..

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read More : “என்னை எதிர்ப்பவர்களால் இதை தைரியமா, கெத்தா சொல்ல முடியுமா..? திமுக, அதிமுகவுக்கு விஜய் சவால்..!

RUPA

Next Post

இரவு உணவை ஏன் சீக்கிரம் சாப்பிட வேண்டும்..? இந்த 6 நன்மைகள அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!

Wed Apr 8 , 2026
Why should you eat dinner early? You must know these 6 benefits!
early dinner

You May Like