நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரிய தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது..
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.. அதன்பின்னர் இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை..
இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.. அதன்படி, இந்த தேர்வுக்கு 11.08.2025 முதல் 08.09.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.. மேலும், தாள் ஒன்றுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 1-ம் தேதியும், தாள் 2-க்கான தேர்வு நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. எனினும் கல்லறை தினம் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டதால் தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது..
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு, நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
Read More : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ. 63,000 சம்பளம்! கடற்படையில் 1,266 காலியிடங்கள்..! உடனே அப்ளை பண்ணுங்க..!



