Flash : தமிழக தேர்தல் ஆணைய இணையதளம் முடங்கியது..! வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்க்க முடியாததால் மக்கள் அவதி!

serverdown

தமிழ்நாட்டில் SIR பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 ஆக இருந்த நிலையில், SIRக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது..


வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. இல்லை என்றால் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இன்று முதல் ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் முடங்கியது.. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? என அறிந்து கொள்ள வாக்காளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தேர்தல் ஆணைய இணையதளத்தை அணுகியதால் சர்வர் முடங்கியது.. இதனால் வாக்காளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.. எனினும் ஒரு நாள் காத்திருந்து நாளை முதல் வாக்காளர்கள் விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்..

Read More : “திமுகவின் கனவு மண்ணோடு மண்ணாக போனது.. அவர்களின் சதிவலையில் விழவேண்டாம்..” இபிஎஸ் எச்சரிக்கை..!

RUPA

Next Post

பெண் சாபம் போக்கும் சப்த கன்னி கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

Sat Dec 20 , 2025
Are you suffering from a female curse? Go to this temple and seek redress..!
temple2 1

You May Like