நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு, த.வெ.க.வின் செயல்பாடுகளில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக விஜய் நேர்காணல்கள் நடத்தியதாகவும், சுமார் 70 சதவீத வேட்பாளர் பட்டியலை அவர் இறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் இன்று (டிசம்பர் 14, 2025) அறிமுகம் செய்ய உள்ளது. இதில், முதல் வேட்பாளராகக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அறிவிக்கப்பட இருக்கிறார். அவர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. அருண்ராஜைத் தொடர்ந்து, மேலும் 20 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.



