2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு ஏராளானோர் அங்கு கூடியிருந்ததால் சில பெண்கள் மயக்கம் அடைந்தனர்.. கூட்ட நெரிசல், போதிய தண்ணீர் வசதி இல்லாததால் சில பெண்கள் மயக்கம் அடைந்தனர்.. மேலும் விஜய்யின் பிரச்சார வாகனம் செல்ல முடியாத அளவுக்கு தொண்டர்கள் அவரின் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.. இதனால் அவரின் வாகனம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது..
விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.. ஆனால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கார் பைக் மூலம் பின் தொடர்ந்து செல்கின்றனர்.. விமான நிலையத்திற்கு தொண்டர்கள் யாரும் வர வேண்டாம், விஜய் பேசும் இடத்திற்கு வந்தால் போதும் என்று அக்கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது.. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஏராளாமான தொண்டர்கள் விமான நிலையம் முன்பு கூடியிருந்தனர்.. மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்றிருக்கிறார்..
இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. காலை 10.30 மணி விஜய் மரக்கடை பகுதியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 12.30 வரை விஜய் அந்த இடத்திற்கே சென்றடையவில்லை. அவர் அங்கு செல்ல மேலும் கால தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் திருச்சியில் விஜய்யை பார்க்க திரளானோர் கூடினர்.. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. காந்தி சந்தை வெங்காய மண்டி, தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தில் மயங்கி விழுந்த 4 பெண்களுக்கு தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.. மேலும் விமான நிலையத்தில் மயங்கிய 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..



