தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் 4 பேர் மயக்கமடைந்துள்ளனர்.. இவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ முகாம்களுக்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.. மதுரையை பொறுத்தவரை நேற்றைய தினமே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், இன்று காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.. எனினும் தொண்டர்கள் இருக்கும் இடத்திலேயே முதலுதவி அளிக்கும் வகையில் ட்ரோன்கள் வைக்கப்பட்டுள்ளது..
அதே போல் தவெக மாநாட்டுத் திடலில் குடிநீர் தீர்ந்துவிட்டதாக புகார் எழுந்தது.. தொண்டர்களுக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டது. குடிநீர் குழாய்களில் அமைக்கப்பட்டு, தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் குடிநீர் வரவில்லை என்று தொண்டர்கள் கூறுகின்றனர்… நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொண்டர்களுக்கு ஜூஸ் வழங்குவது, ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிப்பது என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் வெயில் தாக்கத்தால் தொண்டர்கள் அவதி அடைந்து வருகின்றனர்..
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தவெக மாநாடு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வெயிலின் தாக்கத்தல் தொண்டர்கள் அவதியுறும் நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போதே மேடையில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.. இன்னும் சிறிது நேரத்தில் தவெக தலைவர் விஜய் மேடைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.. முதலில் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என்று கூறப்பட்டது, பின்னர் 3 மணிக்கு மாநாடு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இந்த மாநாடு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது..
வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.. எனவே மாநாட்டை முன்கூட்டியே தொடங்கி, முடிக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..
Read More : போலீசார் தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு.. போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்த மதுரை.. பெரும் பரபரப்பு..!