Flash : முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மரியாதை.. கரூர் சம்பவத்திற்கு பின் வெளியான முதல் போட்டோ..!

vijay devar

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..


இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தேவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : பூசாரியை கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்.. கடும் வாக்குவாதம்.. தர்ணா.. தேவர் நினைவிடத்தில் என்ன நடந்தது? வீடியோ..!

RUPA

Next Post

காதல் மனைவியை கரம் பிடித்த கொஞ்ச நாளில் வேறொரு பெண் மீது வந்த சபலம்..! கட்டிலுக்கு அடியில்.. ஐயோ.. என்ன நடந்தது..?

Thu Oct 30 , 2025
A few days after he held his wife's hand in love, he fell for another woman..! The wife condemned him and killed him.
affair murder 1

You May Like