இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது..
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.. பின்னர் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி வந்தார்..
இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவரின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது..
Read More : “தவெகவில் இணைவது தான் பொருத்தமா இருக்கும்”..!! ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!! குஷியில் விஜய்..!!



