அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உடட 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மத்திய டெக்சாஸில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
45 நிமிடங்களில் 26 அடி உயரம் பெற்ற வெள்ளம் பலரை தண்ணீரில் அடித்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெர கவுண்டியில் மட்டும் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் இறந்தனர். தொடர் மழை மற்றும் மிதக்கும் குப்பைகள் மீட்புப் பணிகளை கடுமையாக்கி வருகின்றன. தற்போது வரை 850 பேர் வெளியேற்றப்பட்டு, எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கூடுதல் உதவியை கோரியுள்ளார். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் நிலைமை மேலும் மோசமாகலாம் என எச்சரித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடரும் நிலையில், இறந்தவர்களின் இறுதி எண்ணிக்கை வெளியாகவில்லை.
Read more: ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த தக்காளி விலை.. கோயம்பேட்டிலையே ஒரு கிலோ இவ்வளவுதானா..?