தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது..
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. சென்னையின் 16 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒரு வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது..
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்..
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 1,27,521 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. ஆர்.கே நகர் தொகுதியில் 56,916 பெயர்களும் பெரம்பூர் தொகுதியில் 97,345 பெயர்களும் , வில்லிவாக்கம் தொகுதியில் 97, 960 பெயர்களும், திருவிக நகர் தொகுதியில் 59,043, எழும்பூர் தொகுதியில் 74,858 வாக்காளர்கள் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளனர்..
ராயபுரம் தொகுதியில் 51,711 பெயர்களும் துறைமுகம் தொகுதியில் 69,824 பெயர்களும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 96, 981 பெயர்களும், அண்ணாநகர் தொகுதியில் 1,18,287 பெயர்களும், விருகம்பாக்கம் தொகுதியில் 1,40,824 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் 87,228 பெயர்களும், தி.நகர் தொகுதியில் 95, 999 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.. மயிலாப்பூர் தொகுதியில் 87,668 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன..
Read More : Flash : SIR-க்கு பின் சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மாவட்ட வாரியான விவரம் இதோ..!



