பணத்தைச் சேமிப்பது என்பது வெறும் பழக்கம் அல்ல, எதிர்கால நம்பிக்கைக்கான முதலீடு எனலாம். வாழ்க்கையில் எப்போது, எந்தச் சூழ்நிலையில் பணம் தேவைப்படும் என்பதைக் கணிக்க முடியாது. அதனால், பலர் தங்களது வருமானத்தில் இருந்து ஒரு பகுதியைச் சேமிக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் அபாயம் உள்ள முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள்; மற்றவர்கள் பாதுகாப்பான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இத்தகைய பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்புகளில் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. அரசின் ஆதரவுடன் இயங்கும் திட்டம் என்பதால், தபால் நிலைய சேமிப்புகள் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன. மோசடி அபாயம் இல்லாமல், நிச்சயமான வருமானம் பெற விரும்புபவர்கள் தபால் நிலையத்தின் RD (Recurring Deposit) திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தத் திட்டத்தில் குறைந்த முதலீட்டிலேயே 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கான தொகையைச் சேமிக்க முடியும். ஒரு நாளைக்கு ரூ.100 அதாவது மாதம் ரூ.3,000 சேமித்தால், 5 ஆண்டுகளில் ரூ.1,80,000 சேமிக்க முடியும். இதற்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுவதால், மொத்தம் ரூ.2,14,097 வருமானமாக கிடைக்கும்.
தபால் அலுவலக RD திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்; மேலும், எந்த அளவிலும் முதலீட்டை அதிகரிக்கலாம். இது சிறிய முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. இதற்குப் பின்னர், RD திட்டத்தின் கீழ் வைப்புத் தொகையின் 50% வரை கடனாகப் பெறும் வசதியும் உள்ளது.
5 ஆண்டுகள் முடிந்ததும், முதலீட்டைத் தொடர விரும்பினால், மேலும் 5 ஆண்டுகளுக்கு அதை நீட்டிக்கவும் முடியும். RD கணக்கைத் திறப்பதும் மிகவும் எளிது.அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம் போன்ற அடிப்படை ஆவணங்களுடன் ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து (single/joint) கணக்கைத் திறக்கலாம்.
Read more: உயிருடன் இருக்கும் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்த ஹமாஸ்; முதல் போட்டோ வெளியானது!