உலக அரங்கில் எதிரொலிக்கும் பாலஸ்தீன குரல்!. வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யூனிவர்ஸில் பங்கேற்கும் முதல் மிஸ் பாலஸ்தீனம்!. நதீன் அயூப் யார்?

Miss Palestine 11zon

நதீன் அயூப்பின் மிஸ் யூனிவர்ஸ் 2025 அறிமுகம், பாலஸ்தீனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது பங்கேற்பாகும். தன்னம்பிக்கை, அழகு, உறுதியுடன் அவர் தனது நாட்டின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்கிறார்.


வரலாற்றில் முதல் முறையாக, பாலஸ்தீன் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்கிறது. இந்த வளர்ச்சி, நீண்ட காலமாக வெறும் அழகுப் போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்டு வரும் சர்வதேச போட்டிக்கு ஒரு மைல்கல்லை குறிக்கிறது. வரும் உலகளாவிய அழகிப்போட்டியில் 27 வயதான நதீன் அயூப் பாலஸ்தீனை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பதை மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு மிஸ் பாலஸ்தீன் பட்டம் பெற்ற நதீன் அயூப், அழகிப்போட்டி வரலாற்றிலும், பிரதிநிதித்துவத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லை அமைத்துள்ளார். அவர் 2025 நவம்பர் 21ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறும் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். உலகின் மிக அதிகம் பார்வையிடப்படும் கலாச்சாரம், நாகரிகம் நிறைந்த மேடையில், அவர் பாலஸ்தீனத்தின் பட்டையை அணிந்து செல்லவுள்ளார்.

நதீன் அயூப் யார்? அயூப் ஒரு மாடல் மட்டுமல்ல,உறுதியும் வலிமைபெறலும் குறித்த ஆதரவாளருமாவார். மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு அவரை பற்றி, “எங்கள் தளத்தை வரையறுக்கும் உறுதியையும் தீர்மானத்தையும் தன்னுள் கொண்டவர்” என்று வர்ணித்துள்ளது.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பாலஸ்தீனைக் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்று ஆழ்ந்த உணர்வுடன் அயூப் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இன்று நான் மிஸ் யூனிவர்ஸ் மேடையில் நிற்பது ஒரு பட்டத்தோடு மட்டுமல்ல, ஆனால் ஒரு உண்மையுடன் அடியெடுத்து வைக்கிறேன். பாலஸ்தீன், குறிப்பாக காசா, துயரங்களை அனுபவிக்கும் இந்தக் காலத்தில், அமைதியாக இருக்க மறுக்கும் மக்களின் குரலை நான் தாங்கிச் செல்கிறேன்.”

மேலும், “உலகம் கண்டறிய வேண்டிய வலிமையை உடைய ஒவ்வொரு பாலஸ்தீனிய பெண்களையும் குழந்தைகளையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நாங்கள் எங்கள் துயரத்தால் மட்டுமே வரையறுக்கப்படவில்லை. நாங்கள் உறுதி, நம்பிக்கை, மேலும் எங்களின் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தாய்நாட்டின் இதயத் துடிப்பாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

அயூப் பங்கேற்பு வெறும் சின்னமாக மட்டுமல்ல; அது கோடிக்கணக்கானோருக்கு சென்றடையும் உலகளாவிய கலாச்சார மேடையில் பாலஸ்தீனின் குரலாக விளங்குகிறது. பல தசாப்தங்களாக, மிஸ் யூனிவர்ஸ் போட்டி பன்மை, திறமை, மற்றும் பெண்கள் வலிமைப்படைதலைக் கொண்டாடும் மேடையாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது. பாலஸ்தீனுக்காக, அயூப்பின் பங்கேற்பு என்பது சண்டைச் செய்திகள் அப்பாற்பட்டு உலகுக்கு தங்கள் அடையாளம், பாரம்பரியம் மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகக் காணப்படுகிறது.

மிஸ் யுனிவர்ஸ் 2025 இல் என்ன எதிர்பார்க்கலாம்? 74வது மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டி உலகின் சுமார் 100 நாடுகளில் இருந்து போட்டியாளர்களை ஒருங்கிணைக்கிறது. இந்த ஆண்டு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள இவ்விழா, அழகும் திறமையும் மட்டுமல்லாமல், பிரதிநிதித்துவம், உடனிணைவு (Inclusivity), சமூகக் குரல் எழுப்புதல் (Advocacy) போன்ற முக்கிய அம்சங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயூப்பின் இந்த வரலாற்றுப் பூர்வமான அறிமுகத்தால், உலகின் கண்கள் அனைத்தும் அவர் அந்த மேடையை எவ்வாறு பாலஸ்தீனியர்களின் குரலை வலுப்படுத்த பயன்படுத்துகிறார் என்பதிலேயே இருக்கும். அவரின் பங்கேற்பு வெறும் அழகிப் போட்டியின் ஒளிச்சுவட்டுகளைத் தாண்டி, உலகளாவிய அரசியல், கலாச்சாரம் மற்றும் சமூக உரையாடல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Readmore: உங்களால் குலதெய்வ கோயிலுக்கு போக முடியலையா..? அப்படினா இந்த பூஜை செய்து குலதெய்வத்தை வீட்டிற்கே வரவைக்கலாம்..!!

KOKILA

Next Post

பல நோய்களை தீர்க்கும் கோயில் தீர்த்தம்..!! நீங்களும் வீட்டிலேயே செய்யலாம்..!! முக்கியமா இந்த மந்திரத்தை சொல்லுங்க..!!

Wed Aug 20 , 2025
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு […]
Perumal 2025

You May Like