பெற்றோரை பிரிந்து தனியாக வாழ நிர்பந்தமா..? இனி கணவர்களும் விவகாரத்து கோரலாம்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் விவாகரத்து நடப்பது மிகக் குறைவு என்கிறது சர்வதேச அறிக்கை. அதாவது, இந்தியத் திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், இந்தியர்கள் திருமணத்தை மதத்தோடும் கலாசாரத்தோடும் தொடர்புபடுத்திப் போற்றுவதுதான். ஆண்களோ, பெண்களோ, அவர்கள் திருமண வாழ்வு கசக்கும்போது, அதிலிருந்து விடுபட்டு வெளிவர நினைப்பது தவறானதல்ல. ஆனால், எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்துப் பெறுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புரிதல் குறைவாக இருக்கிறது.


இந்நிலையில், தங்களது பெற்றோரை பிரிந்து தனியாக வாழ மனைவி நிர்பந்தித்தால் கணவன்மார்கள் விவாகரத்து கோரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவன், பெற்றோருடன் இருப்பதை காரணம் காட்டி விவகாரத்து கேட்டுள்ளார் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறையான காரணங்கள் இல்லாமல் பெற்றோரை வேண்டுமென்றே கைவிட நிர்பந்தித்தால் கணவர்களும் விவகாரத்து கேட்கலாம் என்று கூறி வழக்கை ரத்து செய்தனர்.

CHELLA

Next Post

விரைவில் நாடு முழுவதும் நடமாடும் விரல்ரேகை பதிவு முறை..‌.! மத்திய அரசு தகவல்...!

Tue Apr 11 , 2023
எங்கேயும், எப்போதும் மக்களால் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ப, தொடுதலற்ற பயோமெட்ரிக் முறையை உருவாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையமும், மும்பை ஐஐடி கைகோர்த்துள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஐஐடி மும்பை ஆகியவற்றிற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடமாடும் விரல்ரேகைப் பதிவு முறையைக் கட்டமைக்க கூட்டாக ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. தொடுதலற்ற பயோமெட்ரிக் பதிவு முறை உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். அப்படி வரும் போது, முகத்தின் மூலம் அடையாளம் […]
images 2023 04 11T081135.788

You May Like