மனைவி தனது கணவரை அவரது குடும்பத்துடனான உறவைத் துண்டிக்குமாறு வற்புறுத்துவது கொடுமைக்கு சமம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் பின்வரும் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் அனில் க்ஷேதர்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனைவி தனது கணவனை, அவன் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மன ரீதியிலான கொடுமைக்கு சமம் என நீதிமன்றம் கூறியது. தனியாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமே பிரச்சினை அல்ல.
ஆனால் கணவனை குடும்பத்திலிருந்து விலக்கி, பிணைப்பை முற்றிலும் துண்டிக்க தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது கண்டிப்பாகவே மன உளைச்சலாகும்” என்று கூறியது. கணவருடன் சேர்ந்து வாழாமல் கணவர், அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறுவது துன்புறுத்தலாகும் என்றும், கணவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுப்பதை தீவிர துன்புறுத்தலாக கருதவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகனுடன் தந்தையை நெருங்க விடாமல் திட்டமிட்டு மனைவி தடுப்பதும் துன்புறுத்தலே என்றும், கணவன், மனைவி தகராறில் குழந்தையை பகடைக்காயாக்குவது குழந்தை மனநிலையை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, விவாகரத்து ஆணையை எதிர்த்து அந்தப் பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
Read more: திமுக எதிர்ப்பு என்ற பெயரில் விஜய் வெறுப்பு அரசியல் செய்கிறார்.. திருமாவளவன் சாடல்..