“முதலமைச்சரை விடுங்க.. சங்கீதாவே விஜய்க்கு ஓட்டுப் போடமாட்டங்க..” பொளந்து கட்டிய திருச்சி சூர்யா..!

vijay trichy surya

சமீபத்தில் தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் “ கருத்துக் கணிப்பு என்று சிலர் எடுக்கின்றனர்.. சிலர் நியாயமாக எடுக்கின்றனர்.. சிலர் கடுப்பில் கருத்துக் கணிப்பில் எடுக்கின்றனர்.. ஒவ்வொரு ஊர் ஊராக, தெருத் தெருவக வீடு வீடாக சென்று கருத்துக்கணிப்பை எடுத்துப் பாருங்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றி கழகம் தான் இருப்பதை பார்ப்பீர்கள்..


நம்ம சி.எம். சார் ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசும் போது அவர்களின் கட்சியினர் செய்யும் சில அடாவடிகளால் இரவில் தூக்கமே வரவில்லை என்று கூறியிருந்தார்.. அப்படி அவர் ஒரு நாள் அசந்து தூங்கும் போது, அவரிடம் போய், எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுவீங்க என்று கேட்டுப்பாருங்கள்.. தூக்கத்தில் கேட்டால் கூட விசில் சின்னத்திற்கு தான் ஓட்டுப்போடுவேன் என்று சொல்வார்.. தவெக சிட்டியில் தான் இருக்கிறது.. கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த டெஸ்டை செய்து பாருங்கள்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் திருச்சி சூர்யா விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ தூங்கிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினை எழுப்பி கேட்டால் கூட, அவர் விசிலுக்கு தான் ஓட்டுப் போடுவேன் என்று சொல்வார் என்று விஜய் சொல்கிறார்.. முதலமைச்சரை வேண்டாம் உன் வீட்டில் உன் பொண்டாட்டியை எழுப்பி கேளு யாருக்கு ஓட்டுப்போடுவாங்க என்று.. ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறாராம். அதெல்லாம் வேண்டாம்.. உன் வீட்டில் ஓட்டுப்போடுவார்களா? விஜய் மனைவி விஜய்க்கு ஓட்டுப் போடுவார்களா? விஜய் மகன் அவருக்கு ஓட்டுப் போடுவாரா? சங்கீதா லண்டன் சிட்டிசன் என்றூ சொல்கிறார்கள்..

விஜய் மகன் கனடா சிட்டிசன் என்று சொல்கிறார்கள்.. விஜய் வீட்டிலேயே அவருக்கு போட மாட்டார்கள்.. திமுக எதிர்ப்பை மட்டுமே முதலமைச்சராக தகுதி என்று விஜய் நினைக்கிறாரா? அது ஒரு பகுதி தான்.. மக்களுக்காக வேறு என்ன செய்ய போகிறீர்கள்.. திமுக திட்டுவதை மட்டுமே விஜய் வேலையாக வைத்திருக்கிறார்.. முதல்வர் மீது விமர்சனம் வைப்பதை தவிர தவெக, விஜய்யின் அரசியல் செயல்பாடு என்ன? மக்கள் பிரச்சனைக்கு விஜய் எங்கு குரல் கொடுத்துள்ளார்..

விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் இரண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு வெளியே வந்துள்ளார்.. ஒன்று பரந்தூர் விமான நிலையம், இன்னொன்று லாக் அப் மரணம்.. இவை தவிர வேறு எந்த பிரச்சனைகளுக்கும் விஜய் வெளியே வரவில்லை..

அதிமுக ஊழல் சக்தி விஜய் சொல்கிறார்.. யாரை குறிப்பிட்டு ஊழல் கட்சி என்று சொல்கிறீர்கள்.. தைரியமான ஆளாக இருந்தால் ஜெயலலிதா என்று பெயரை சொல்ல வேண்டியது தானே.. விஜய் கட்சிக்குள்ளே நிறைய பிரச்சனைகள் உள்ளது.. அதை எல்லாம் சரி செய்யவில்லை.. ஆனால் மற்ற கட்சிகளை பற்றி பேசுகிறார்.. கட்சி தலைவரை பொறுத்தவரை செயல்பாடுகள் தான் முக்கியம்.. அண்ணா, எம்.ஜி.ஆர் உடனே முதலமைச்சர் ஆகவில்லை.. திமுகவை திட்டுவதால் மட்டும் பலன் கிடைக்காது. திட்டிக் கொண்டே இருப்பதால் வெற்றி பெற முடியாது.. செய்யும் விஷயங்களை ஒழுங்காக செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்.

Read More : “பொய் பரப்புவதை நிறுத்துங்க”..!! “இதை உங்கள் சகோதரரிடமே கேளுங்க”..!! கனிமொழி எம்பியை வறுத்தெடுத்த அண்ணாமலை..!!

RUPA

Next Post

மணி பிளான்ட்டில் இந்த ஒரு பொருளை வைத்தால்.. பண இழப்பே ஏற்படாது..! அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்..!

Thu Feb 5 , 2026
இந்தச் செடியை பால்கனி, ஹால் அல்லது அலுவலகத்தின் மூலையில் வைத்தால், அது மனதிற்கு குளிர்ச்சியையும் வீட்டிற்கு அழகையும் தருகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி பிளான்ட் மிகவும் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்டமும் வலுவாக இருக்கும். செடி வாடி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மணி பிளான்ட்டிற்குத் தவறாமல் தண்ணீர் ஊற்றி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும். […]
money plant

You May Like