பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் மற்றும் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோர் குற்றவாளிகள் என்று வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.. ஹசீனா ஆட்சியை அகற்றிய 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தனர் என்றும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் டாக்காவில் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் திங்களன்று வாசிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு காரணமாக டாக்கா மற்றும் அண்டை பிராந்தியங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..
ஹசீனா மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
ஷேக் ஹசீனா மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இவற்றில் கொலைகள், கொலை முயற்சி, சித்திரவதை மற்றும் நிராயுதபாணியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது கொடிய சக்தியைப் பயன்படுத்துதல்; கொடிய ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்த உத்தரவுகளை பிறப்பித்தல்; மற்றும் ரங்பூர் மற்றும் டாக்காவில் குறிப்பிட்ட கொலைகள் ஆகியவை அடங்கும்.
நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் –
டாக்காவில் போராட்டக்காரர்களை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டது
பொதுமக்கள் கூட்டத்தின் மீது ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்துதல்
மாணவர் ஆர்வலர் அபு சயீத்தின் கொலை
ஆதாரங்களை அழிக்க அஷுலியாவில் உடல்களை எரித்தல்
சங்கர்புல்லில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒருங்கிணைந்து கொன்றது.
எனினும் ஷேக் ஹசீனா தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
எனினும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீர்ப்பாய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.. இன்று தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், ஷேக் ஹசினா மற்றும் அவரது முக்கிய உதவியாளர்கள் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக குற்றவாளிகளாகத் தீர்மானித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, பங்களாதேஷ் நீதிமன்றம் ஷேக் ஹசினாவுக்கு முதல் குற்றச்சாட்டிற்காக — வன்முறையை தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிடுதல், மற்றும் கொடூரங்களைத் தடுக்க இயலாமை போன்ற குற்றச்சாட்டுகளாக இயற்கையாக மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இதையடுத்து கடந்த ஆண்டு கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்பப்டுத்தி வருகின்றனர்..
Read More : மதீனா விபத்தில் 42 இந்தியர்கள் பலி.. அவசர எண்கள் அறிவிப்பு.. 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைத்த மத்திய அரசு..!



