பிரிட்டிஷ் முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக இன்று கைது செய்யப்பட்டார். அவரது 66வது பிறந்தநாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டகாக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிகாலை காவல் துறை நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிஹாம் எஸ்டேட்க்கு சென்றது. விண்ட்சரில் இருந்த அவரது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, அவர் தற்போது அங்கே வசித்து வந்தார்.
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான அவரது தொடர்பு குறித்து வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ சாண்ட்ரிங்ஹாமிற்கு இடம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ 2010 ஆம் ஆண்டு, தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு வணிகம் தொடர்பான அறிக்கைகள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டில் தான் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டுள்ளார்..
“இந்த குற்றச்சாட்டை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, பொது பதவியில் தவறான நடத்தை குறித்த விசாரணையை தொடங்கியுள்ளோம்,” என்று காவல் துறை தெரிவித்தது. மேலும், “நடந்து கொண்டிருக்கும் விசாரணையின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்காக, எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த குற்றச்சாட்டை விசாரித்து வருகிறோம்,” என்றும் கூறியது.
Read More : குழந்தைகள் உட்பட 16 பேர் உடல் கருகி பலி..! கேஸ் கசிவால் பயங்கர வெடிவிபத்து.. பாகிஸ்தானில் சோகம்..!



