இந்தியா – ஆப்பிரிக்க அரசியலில் ஒரு முக்கிய நபராக திகழ்ந்த கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா (Raila Odinga), தமது 80-வது வயதில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தபோது திடீரென மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேவமாதா மருத்துவமனை, ஒடிங்காவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரான ஒடிங்கா, எதிர்க்கட்சித் தலைவராக 1997 முதல் 2022 வரை ஐந்து முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஓடிங்கா திடீரென மயங்கி விழுந்தார். அவருடன் அவரது சகோதரி, மகள், தனிப்பட்ட மருத்துவர் மற்றும் கென்ய, இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளனர். இதையடுத்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் இறந்துவிட்டார். முன்னதாக இவர், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு எர்ணாகுளம் கூத்தாட்டுக்குளத்திற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தார்.
கென்ய அரசியலில் ஒடிங்கா ஒரு ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக திகழ்ந்தவர். அவரது மறைவு, 2027-ல் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக, நாட்டின் அரசியல் எதிர்க்கட்சிக்குள் ஒரு குறிப்பிடத்தக்க தலைமை வெற்றிடத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிங்காவின் மரணம் குறித்த செய்தி கென்யாவில் பரவியதும், அதிபர் வில்லியம் ரூட்டோ (William Ruto) தலைநகர் நைரோபியில் உள்ள ஒடிங்காவின் குடும்ப வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார்.
Read More : தீபாவளி முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன…!