தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்..
முன்னாள் எம்.பிக்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோரை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனும் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.. அதே போல் ஜெயலலிதா இருந்த போது, அவருக்கு உரைகளை எழுதிக் கொடுத்தவ்ரும் நமது எம்.ஜி.ஆர் ஆசிரியராகவும் இருந்த மருது அழகுராஜ் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்..
அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து சில நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்..
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முன்னிலை இன்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.. கள்ளப்புலியூரை சேர்ந்த திமுக நிர்வாகியான பழனி தலைமையில் இவர்கள் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளனர்.. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மகிழ்ச்சியில் உள்ளாரம்.. 2026 சட்டமன்ற தேர்தலில் சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும், அவர் அத்தொகுதியில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..



