ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கலங்க வைக்கும் சோகப் பின்னணி..!

death n

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யாத்திரி நிவாஸில் தங்கியிருந்த திருவையாறை சேர்ந்த சாமிநாதன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..


தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த சாமிநாதன் (67)ம் அவரது மனைவி செண்பகவல்லி (65) மற்றும் மகள்கள் பவானி (47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர்.. 14-ம் தேதி அன்று இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்டுள்ளனர்.. இந்த நிலையில் 19-ம் தேதியான நிலையில் அவர்கள் அறையை காலி செய்யாததால் இதுகுறித்து கேட்க இன்று விடுதி பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது.. உடனே அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து பார்த்த போது சாமிநாதன் உள்ளிட்ட 1 பேரும் இறந்த நிலையில் இறந்துள்ளனர்..

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.. விசாரணையில், தற்கொலை செய்து கொண்டதன் சோகப்பின்னணி வெளியாகி உள்ளது.. ஸ்ரீ ரங்கம் வந்து ரங்கநாதரை தரிசித்துவிட்டு உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு 2 பெண் பிள்ளைகளுடன் தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டனர்..

சாமிநாதன் – செண்பகவல்லி தம்பதியின் மூத்த மகள் திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து ஆகி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.. இளைய மகள் மன வளர்ச்சி குன்றியவர் என்பதால் வயதான தங்களால் பெண் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை என பெற்றோர் மன வேதனையில் இருந்துள்ளனர்.. தங்கள் காலத்திற்கு பின்னர் பெண் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்..

4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

RUPA

Next Post

Flash: SIR பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.. கோவையில் மட்டும் 6,50,590 பேர் நீக்கம்..!

Fri Dec 19 , 2025
The Election Commission released the draft voter list after the SIR work.. 6,50,590 people were removed from Coimbatore alone..!
tamilnadu sir election commission

You May Like