ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடந்து வருகிருகிறது. திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.. ஆனால் இந்த கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என்று உறுதியாக கூறிவரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என நோக்கில் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம் இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என பாஜக கூறி வருகிறது.
மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநாட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு பதவிகளை கொடுத்து பழைய நிர்வாகிகளை நீக்கம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி 4 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. மண்டபம் பேரூராட்சி அதிமுக செயலாளர் சீமான் மரைக்காயர், மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச்செயலாளர் ஹமீது, மாவட்ட மீனவர் பிரிவு இணை செயலாளர் காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணை செயலாளர் பக்தர் ஆகியோர் நீக்கப்படுவதாக எடப்பாடு பழனிசாமி அறிவித்துள்ளார்..
Read More : ஜி.கே. வாசனுடன் இணைந்தார் தமிழருவி மணியன்.. தமாகவில் ஐக்கியமானது காமராஜர் மக்கள் இயக்கம்..!



