பல ஆயிரம் கோடி மோசடி.. ED சம்மன்.. ஏற்கனவே திவாலில் இருக்கும் அனில் அம்பானிக்கு புதிய சிக்கல்..

aniljpg 1754017948292 1

கடன் மோசடி தொடர்பாக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணமோசடி வழக்கில் அமலாக்கத்து றை (ED) தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அம்பானி அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL), ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியது குறித்தும், இந்த பணத்தை திசைதிருப்பியது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.


முன்னதாக, அமலாக்கத்துறை கடந்த வாரம் அனில் அம்பானிக்கு சொந்தமான 50 நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டது.. மேலும், அனில் அம்பானி குழும நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் உட்பட 25 பேரையும் சோதனை செய்தது. விசாரணையில் உள்ள 2 கடன்களை யெஸ் வங்கி RHFL மற்றும் RCFL நிறுவனங்களுக்கு வழங்கியது குறித்து சோதனை நடந்தது.

ED அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ இரண்டு வழக்குகளிலும், மத்திய புலனாய்வுப் பிரிவு யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூரை குற்றம் சாட்டப்பட்டவராகக் குறிப்பிட்டுள்ளது. வங்கிகள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களை ஏமாற்றுவதன் மூலம் பொதுமக்களின் பணத்தைத் திருப்பிவிட அல்லது திருட திட்டம் தீட்டப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது,” என்று தெரிவித்தார்..

அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன்களில் விதி மீறல் நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது… விதிமுறைகளை மீறி, இந்தக் கடன்கள் பல குழு நிறுவனங்கள் மற்றும் அம்பானியின் போலி நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

RHFL இன் நிறுவனக் கடன்களில் வியக்க வைக்கும் வகையில் அதிகரிப்பு இருப்பதாக ED அதிகாரி கூறினார். 2017-18 நிதியாண்டில் ரூ.3,742.60 கோடியிலிருந்து 2018-19 நிதியாண்டில் ரூ.8,670.80 கோடியாக இருந்தது. இதுவும் ED விசாரணையில் உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ரூ.14,000 கோடிக்கும் அதிகமான கடன் மோசடி செய்ததாக ED அதிகாரிகள் தெரிவித்தனர்.. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் அனில் அம்பானி 2019 இல் RCOM இன் வாரியத்திலிருந்து ராஜினாமா செய்தார் என்றும், தற்போது, அனில் அம்பானி எந்த ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் வாரியத்திலும் இல்லை என்றும் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருந்தார்..

மேலும் “ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (RCOM), திவால்நிலை மற்றும் திவால்நிலைச் சட்டம், 2016 இன் கீழ் கார்ப்பரேட் திவால் நிலை செயல்முறையின் கீழ் (CIRP) கீழ் 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இந்த விஷயத்தில் அதன் குழு தனது முடிவை எடுப்பதற்கு முன்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அனில் அம்பானிக்கு தனிப்பட்ட விசாரணைக்கான வாய்ப்பை வழங்கவில்லை. மேலும், இதே போன்ற காரணங்களுக்காக மற்ற அறிவிப்புகள் மீதான இதே போன்ற குற்றச்சாட்டுகளை SBI கைவிட்டது. ” என்று தெரிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனங்களில் நடத்தப்பட்ட 3 நாள் ED சோதனைகள் ஜூலை 27 அன்று முடிவடைந்தன. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பங்குச் சந்தைகளில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : நாளுக்கு நாள் அதிகரிக்கும் AI ஆபத்து!. இவர்களது வேலை பறிப்போகும் அபாயம்!. மைக்ரோசாப்ட் ஆய்வில் அதிர்ச்சி!

English Summary

The Enforcement Directorate has summoned Anil Ambani in connection with a loan fraud case.

RUPA

Next Post

ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. எவ்வளவு தெரியுமா?

Fri Aug 1 , 2025
In Chennai today, the price of gold fell by Rs. 160 per sovereign, selling for Rs. 73,200.
360 F 613229837 ohXkiDGLI6YYcm1310lsyik3sralKlQN

You May Like