தருமபுரி மாவட்டத்தில் நாளை முதல் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் – || (தொகுதி || மற்றும் || A பணிகள்) முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
மேலும் 10 இலவச மாதிரி தேர்வுகள் முறையாக திட்டமிடப்பட்டு 22.07.2025 அன்று தொடங்கப்பட்டு வாரந்தோறும் மண்டல அளவில் நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வலுவலகத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3000க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும் 2024 ஆம் ஆண்டு TNPSC Group II, IIA முதல்நிலை தேர்வில் இவ்வலுவலகத்தில் பயின்ற 29 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://shorturl.at/BO2Cu என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.