17 வயது சிறுமியுடன் அடிக்கடி உல்லாசம்..!! திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் மோகன்தாஸ் (23). இவர் தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், ராணுவ பயிற்சிக்காக அசாம் மாநிலத்துக்கு மோகன்தாஸ் சென்றுவிட்டார். இதற்கிடையே, அந்த சிறுமியின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. மேலும், தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி த்னது பெற்றோரிடம் கூறியுள்ளார்.


இதனையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது ராணுவ வீரர் மோகன்தாஸ் உடனான காதல் விவகாரத்தையும், நெருங்கி பழகியதையும் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் மகளிர் போலீசார் ராணுவ வீரர் மோகன்தாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இமெயிலில் கொலை மிரட்டல்! காவல்துறை பலத்த பாதுகாப்பு!

Mon Mar 20 , 2023
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் ஒருவர் சல்மான் கான். இவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் மானை வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் சல்மான் கான் இருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சல்மான் கானின் […]
IMG 20230320 WA0122

You May Like