கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மந்திரா என்ற பெண், தனது கணவர் பிஜோனுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இந்நிலையில், கணவர் பிஜோன் மற்றும் அவரது நண்பர் சுமன் ஆகிய இருவரும் அந்தமான் தீவில் வேலைக்கு சென்றுவிட்டனர்.
மனைவி மந்த்ரா, தனது தாய் வீட்டில் 6 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். பிறகு, பெங்களூருவில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில் மகனை விட்டுவிட்டு, அருகில் தனி வீட்டில் மந்த்ரா இருந்துள்ளார். இந்த சூழலில் தான், வீட்டில் இருந்து மந்த்ரா மற்றும் அவரது கணவரின் நண்பர் சுமன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், சுமனும், மந்த்ராவும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கணவரின் பிரிவு இதற்கு சாதகமாக அமைந்த நிலையில், இந்த கள்ளத்தொடர்பு குறித்து வெளியில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது.
இந்த கொலை சம்பவம் நடந்த 15 நாட்களுக்கு முன்பே அந்தமானில் இருந்து சுமன் மந்த்ரா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மந்த்ராவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை சுமன் செய்துள்ளார். பின்னர், அதே கத்தியால் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : வீட்டை விட்டு ஓடிய 3 சிறுமிகள்..!! கணவன் – மனைவி போல் திருமணம் செய்து உல்லாசமாக இருந்த அதிர்ச்சி சம்பவம்..!!