இதய நோய் முதல் உடல் எடை குறைப்பு வரை..!! இந்த ஒரு பொருளை உங்க சமையலில் சேர்க்க மறந்துறாதீங்க..!!

Cinnamon 2025

இலவங்கப்பட்டை என்பது நறுமண மூலிகைகளில் முக்கியமான ஒன்றாகும். இது இந்திய பாரம்பரிய சமையலறைகளில் தவறாமல் இடம்பெறும் முக்கிய பொருள் ஆகும். இது உணவுக்கு மணமும், சுவையும் மட்டுமல்லாது, உடல்நலனுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறத. இதனால், இலவங்கப்பட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


* இலவங்கப்பட்டையில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் தன்மை கொண்ட சில இயற்கை சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக சின்னமால்டிஹைடு போன்றவை டயாபடீசைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

* கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க இலவங்கப்பட்டை பயனுள்ளதாக அமைகிறது.

* உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளதால், இது ஒரு இயற்கையான நிவாரணமாக பயன்படுத்தப்படுகிறது.

* ஞாபக சக்தி, கவனம் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளை மேம்படுத்தும் தன்மை கொண்டது. மன அழுத்தத்தையும் குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.

* பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டு, தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.

* வயிறு தொடர்பான பிரச்சனைகள், அஜீரணம், வாயு உள்ளிட்டவை குறைய, இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கும்.

* இது சர்க்கரையை கட்டுப்படுத்துவதால் பசி உணர்வு குறைத்து, உடல் எடையை நிர்வகிக்க உதவியாக இருக்கும்.

* வாய்நோய்களைத் தவிர்க்கும் வகையில் ஈறுகளுக்கு பாதுகாப்பளித்து, சுவையுடன் நாவையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

* தொண்டை வலி, குமட்டல், தலைவலி, மன அழுத்தம், எரிச்சல் போன்றவற்றை குறைத்து, மனநிலையைச் சீர்படுத்தும் தன்மையும் இதில் உள்ளது.

Read More : மீண்டும் சீறி வரும் கொரோனா..!! அமெரிக்காவில் ஆட்டத்தை தொடங்கிருச்சு..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

CHELLA

Next Post

பெங்களூரில் புது ரூல்ஸ்!. இனி PG-விடுதியில் தங்க வாடகையை ரொக்கமாக செலுத்தவேண்டும்!. 12% ஜிஎஸ்டி வேற!. விழிப்பிதுங்கும் இளைஞர்கள்!

Tue Aug 12 , 2025
பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள PG தங்குமிடங்கள் மிகவும் பிரபலமானவை. இதை வேலைக்காக நகரம் வருகிற இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், புது பட்டதாரிகள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த […]
Bengalore PG rent 11zon

You May Like