நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை தேடுகிறீர்களா? அப்படியென்றால் எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய சிறந்த 10 குடலுக்கு ஏற்ற சிற்றுண்டிகளை’ பரிந்துரைத்துள்ளார்.
வறுத்த சன்னா, மக்கானா ஏன் ஆரோக்கியமான சிற்றுண்டிகள்?
வறுத்த சுண்டல் (Roasted Chana): நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. ஜீரண ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவும்.
மகானா (Fox Nuts / Lotus Seeds): குறைந்த கலோரி, அதிக ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், எளிதில் ஜீரணமாகும், மக்னீஷியம் நிறைந்தது.
ஹம்மஸில் இருக்கும் சுண்டல் (Chickpeas) நார்ச்சத்து மற்றும் புரதத்தை வழங்கும். அதனுடன் சேர்த்து சாப்பிடும் காய்கறிகள் கூடுதல் நார்ச்சத்து மற்றும் சத்துக்களை தருகின்றன.
டார்க் சாக்லேட் (Dark Chocolate): மிதமாக சாப்பிட்டால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். இது ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
முளைகட்டிய பச்சை பயிறு (Sprouted Moong): எளிதில் ஜீரணமாகும், அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் சத்துக்கள் நிறைந்தது.
இந்த சிற்றுண்டிகளை சாப்பிடுவது உங்கள் ஜீரணத்தை பாதிக்காது. இந்த ஆரோக்கியமான தேர்வுகள் உங்கள் குடலை மகிழ்ச்சியாகவும், உங்கள் சக்தியை நிலைத்திருப்பதாகவும் வைத்திருக்கும். இந்த குடலுக்கு ஏற்ற சிற்றுண்டிகளில் எதை நீங்கள் அடிக்கடி சாப்பிடுகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.”
குடலுக்கு உகந்த முதல் 10 சிற்றுண்டிகள்: டாக்டர் சேதியின் கூற்றுப்படி, இந்த சிற்றுண்டிகள் சுவையானவை மட்டுமல்ல, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன, நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும், அதிக ஆற்றலுடனும் உணர உதவுகின்றன. வறுத்த சுண்டல், கிரேக் தயிர் + பெர்ரிஸ் (Plain Greek Yogurt with Berries), மகானா, ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய், கலப்பு கொட்டைகள் மற்றும் பூசணி விதைகள், ஹம்முஸ் மற்றும் காய்கறிகள், வேக வைத்த எடமாமே (Boiled Edamame), டார்க் சாக்லேட் (70 சதவீதம் கூடுதலாக), முளைகட்டிய பச்சை பயிறு சாட், கேஃபிர் அல்லது மோர் (இனிப்பு சேர்க்காதது).