தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் மாற்றி அமைக்க பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களின் கவனச் சிதறலை கருத்தில் கொண்டு வகுப்பறைகளின் வடிவமைப்பு மாற்றப்பட உள்ளது. தற்போதைய வகுப்பறை அமைப்பால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் “ தற்போதைய நேரடி அமைப்பு முறையால், மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.. எனவே ப’ வடிவில் வகுப்பறைகள் மாற்றி அமைக்க வேண்டும்.. ‘ப’ வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீது கற்றல் மீதும் இருக்கும். கரும்பலகை, ஆசிரியர்களை தெளிவாக பார்க்கும் வகையில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறை இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ கற்றல் முறை உரையாடலாக இருக்கும் இந்த வடிவில் வகுப்பறை அமைக்கப்படும்.. மாணவர்கள் ஒருவரை ஒருவர் நேராக பார்க்கும் போது மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வர்.. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது உன்னிப்பாக கவனிக்க முடியும். அனைத்து பள்ளிகளிலும் வாய்ப்பு இருக்கும் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க வேண்டும்..” என்று தெரிவித்துள்ளார். கேரள அரசு சமீபத்தில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. இந்த வகுப்பறைகள் நடைமுறை வரும் பட்சத்தில், தமிழ்நாட்டில் இனி கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ற பிரிவே இருக்காது..
Read More : பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை.. அமித்ஷா தூண்டில் போட்ட நிலையில் மீண்டும் தவெக திட்டவட்டம்..