உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்..
அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரத்தில் 4 நாட்கள், செவ்வாய் முதல் வெள்ளி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.
நவம்பர் 30-ம் தேதி வரை 196 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முகாம் நடைபெறும், தேதியை www.cmhelpline.tnega.org என்ற இணையதளத்தில் அறியலாம்.. ரேஷன் கார்டு மாற்றம், ஆதார் கார்டு மாற்றம் அல்லது புதிய ஆதார் கார்டு, பட்டா தொடர்பான சேவைகளை பெற முடியும்.. மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றி விளக்கம் அளிப்பார்கள், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்களை சேர்க்க வேண்டும், தகுதி வரம்பு என்ன ஆகியவை குறித்து விளக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்..? – விரைவில் வெளியாகும் அறிவிப்பு