சுகர் முதல் உடல் எடை குறைப்பு வரை..!! தினமும் ஒரு கப் போதும்..!! காட்டுயானம் அரிசியின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!!

Rice 2025

கஞ்சி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு உணவு. பல்வேறு வகையான சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்றவற்றில் கஞ்சி செய்து குடித்திருப்போம். ஆனால், காட்டுயானம் அரிசி கஞ்சி பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது கவுனி அரிசியைப் போலவே இருந்தாலும், சற்று சிவப்பு நிறத்தில் காணப்படும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி, பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.


காட்டுயானம் அரிசியின் பயன்கள் :

காட்டுயானம் அரிசியில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஜிங்க், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசி மிகவும் நல்லது. உடல் கொழுப்பைக் குறைத்து, உடல் எடையை சீராகப் பராமரிக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த அரிசி பெரிதும் உதவுகிறது.

காட்டுயானம் அரிசி கஞ்சி செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

காட்டுயானம் அரிசி – 1 டம்ளர்

நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 5 பல் (நறுக்கியது)

கேரட் – 2 (நறுக்கியது)

பீன்ஸ் – 8 (நறுக்கியது)

மிளகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 7 டம்ளர்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)

செய்முறை :

* முதலில், ஒரு வாணலியில் காட்டுயானம் அரிசியைச் சேர்த்து, பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

* வறுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* பின்னர், குக்கரில் நெய் விட்டு சூடானதும், பூண்டு, கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

* பிறகு, சீரகம் மற்றும் மிளகை தட்டி சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும்.

* இப்போது, 7 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

* விசில் அடங்கியதும், குக்கரை திறந்து பார்க்கவும். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுநீர் சேர்த்து கலந்தால், சுவையான காட்டுயானம் அரிசி கஞ்சி தயார்.

Read More : ஒரே முதலீடு வாழ்நாள் முழுவதும் பென்சன்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? எவ்வளவு பணம் கிடைக்கும்..?

CHELLA

Next Post

விவசாயிகளுக்கு துரோகம்.. 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி...! அன்புமணி எதிர்ப்பு...!

Mon Sep 8 , 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக திமுக அரசு […]
13507948 anbumani 1

You May Like