நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், நவராத்திரியின் முதல் நாளான நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நற்செய்தியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடி பேசுகையில், நாளை முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாளில் இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அமலாகின்றன. இதன் மூலம், நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த ஜிஎஸ்டி குறைப்பு ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் வர்த்தகர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும். இது இந்தியாவின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும். ஜிஎஸ்டி வரி குறைப்பு, பல்வேறு வரி விகிதங்களை மாற்றி, எளிமையாக்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தம், மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொருட்களை முடிந்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். அதேபோல், இந்திய பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இனி உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை குறைக்கப்பட்ட விலையில், நாளை காலை முதல் வாங்கிக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : இதய நோய், உயர் ரத்த அழுத்தம்..!! பன்னீரை அதிகம் சாப்பிட்டால் பயங்கர ஆபத்து..!! எப்படி சாப்பிட வேண்டும்..?



