உடல் எடை குறைப்பு முதல் ரத்த சர்க்கரை குறைப்பு வரை..!! இந்த அதிசய மீனை சாப்பிட்டால் இவ்வளவு மருத்துவ பயன்களா..?

Fish 2026

உடல் எடையை குறைப்பதில் தொடங்கி, இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகளை வாரி வழங்கும் ‘கொடுவா மீன்’ குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.


கொடுவா மீன் வெறும் சுவைக்காக மட்டும் புகழ்பெற்றது அல்ல; இது ஒரு சிறந்த மருத்துவ குணமிக்க உணவாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தின் முக்கியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மேற்கொண்ட நீண்டகால ஆய்வின் முடிவுகள் அண்மையில் (2025-ல்) வெளியாகின. அதில், கொடுவா மீனைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகளை நிர்வகிப்பதில் இந்த மீன் முக்கியப் பங்காற்றுகிறது.

இதய நோயாளிகளுக்கு கொடுவா மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் நிறைந்துள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து மாரடைப்பு அபாயத்தை தடுக்கின்றன. மேலும், இந்த அமிலங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி நினைவாற்றலை அதிகரிக்க செய்வதால், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த உணவாகும்.

வைட்டமின்-ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செறிந்துள்ள கொடுவா மீன், கண்பார்வையை மேம்படுத்துவதோடு, முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை பாதிப்புகளை தள்ளிப்போடுகிறது. மீன் வகைகளிலேயே அதிகப்படியான வைட்டமின்-டி கொண்டது கொடுவாதான் என்பதால், இது எலும்புகளை உறுதிப்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

ஜிம்முக்கு செல்பவர்கள் மற்றும் டயட் இருப்பவர்களுக்கு கொடுவா மீன் ஒரு சிறந்த சாய்ஸ். 100 கிராம் கொடுவா மீனில் சுமார் 22 கிராம் உயர்தர புரதம் உள்ளது. உலகப்புகழ் பெற்ற சாலமன் மீனுடன் ஒப்பிடுகையில், இதில் பாதியளவு கலோரிகளே உள்ளன. இதனால் தசை வலிமை பெறுவதோடு, தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

Read More : ஈரான் போர்..!! இந்தியாவில் இன்னும் 10 நாட்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் இருக்கு..!! போர் நீடித்தால்..? மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்..!!

CHELLA

Next Post

அமெரிக்கா - ஈரான் மோதலில் முதல் இந்தியர் பலி..! ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்.. அதிர்ச்சி தகவல்..!

Mon Mar 2 , 2026
திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு […]
oman ship

You May Like