நாம் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தாத ஒரு பொருள் காராமணி. ஆனால், இதில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. இந்தச் சிறிய தானியம் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எடை குறைப்பு மற்றும் ரத்த சோகை : காராமணியில் உள்ள நார்ச்சத்து, வயிறை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால், அடிக்கடி பசி ஏற்படாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். மேலும், இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் : காராமணியில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை சீராக்கி, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது உடல் சோர்வை போக்கவும், நல்ல தூக்கத்திற்கும் வழி வகுக்கும். எனவே, பல ஆரோக்கிய பலன்களைக் கொண்ட காராமணியை, உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது.
சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகள் வலிமை : காராமணியில் இருக்கும் வைட்டமின்கள், புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சரும செல்களை ஆரோக்கியமாக வைத்து, பளபளப்பான சருமத்தை அளிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், விரைவிலேயே வயதாவதைத் தடுத்து, இளமையாக இருக்கவும் உதவும். மேலும், இதில் உள்ள ஃபோலேட், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.
Read More : இது தெரிந்தால் இனி வெறும் இளநீர் குடிக்க மாட்டீங்க..!! இந்த 5 பொருளிலும் அவ்வளவு நன்மைகள் இருக்கு..!!