எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள். அவர்களில் இன்றும் அதிகம் பேசப்படுபவர் 1996-ல் காலமான பாபா வாங்கா. இவர், இளவரசி டயானாவின் மரணம் முதல் கொரோனா பெருந்தொற்று வரை பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்தவர். அந்த வகையில் தற்போது, வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வேற்றுகிரகவாசிகளுடன் முதல் தொடர்பு :
பாபா வாங்காவின் 2026 கணிப்புகளில், வேற்றுகிரகவாசிகளுடன் மனிதர்கள் முதல் தொடர்பு கொள்ளும் சம்பவம் நவம்பர் 2026ஆம் ஆண்டில் நடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டலத்தினுள் ஒரு பெரிய விண்கலம் நுழையும்போது இது நிகழக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.
இயற்கை பேரிடர் :
2026 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான பேரழிவு தரும் இயற்கை பேரிடர்கள் உலகெங்கிலும் ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். உலகத்தின் பல பகுதிகளில் பூகம்பங்கள், எரிமலைகள் மற்றும் தீவிரக் காலநிலை மாற்றங்கள் உயிர்களை பலிவாங்குவதுடன், உள்கட்டமைப்பை அழிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகப் போர் :
2026ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் மூள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. தைவானை சீனா கைப்பற்றுவதும் மற்றும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல்களும் இந்த போருக்கு முக்கியக் காரணிகளாக இருக்கலாம் என்று அவரது கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகெங்கிலும் நிலவும் பதட்டமான அரசியல் சூழல் காரணமாக, இந்த கணிப்பு நிகழ வாய்ப்புள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) :
பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஒரு திருப்புமுனையாக அமையும். இயந்திரங்கள் மிக முக்கியமான துறைகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கும். இது அதிகப்படியான வேலையின்மை, நெறிமுறைகள் சார்ந்த சிக்கல்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் குறித்த கவலைகளை எழுப்பும் என்றும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.
Read More : மண் பானைகளில் சமைப்பதால் உடலில் நடக்கும் மேஜிக்..!! ஆனால் இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க..!!