தகைசால் தமிழர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை..! ‘வீர வணக்கம்’ என முழக்கம்.. முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை..!

nallakannu arasu mariyathai 1 1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.. சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.. மேலும் ரஜினி, சூர்யா, கார்த்தி, திரை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்..

இந்த நிலையில் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அவரின் உடலுக்கு காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

நல்லகண்ணு உடலுக்கு மலர்வளையம் வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீர முழக்கம் எழுப்பி இறுதி மரியாதை செலுத்தினார்.. ” வீர வணக்கம் வீர வணக்கம்” என முழக்கமிட்டு நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நல்லகண்ணு உடல் தானமாக வழங்கப்படுகிறது..

இதன் மூலம் மறைந்தும், மக்களுக்கு சேவையாற்ற செல்கிறது தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் உடல்.. மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தோழர் நல்லகண்ணு உடல் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி வரை மக்களின் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டிருக்கும்.. பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நல்லக்கண்ணு உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படுகிறது.

Read More : அப்ப தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியா..! விஜய்யை சந்திக்கும் ராகுல்..? திமுகவின் பிளான் என்ன..?

RUPA

Next Post

அரசு வகுத்த விதிகளில் என்ன தவறு உள்ளது..? ரோடு ஷோ தொடர்பான வழக்கில் தவெகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

Thu Feb 26 , 2026
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த உருவாக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து, தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது என்று தவெக தரப்பு வாதிட்டது.. ஒரு நாளில் ஒரே இடத்திற்கு பல கட்சிகள் விண்ணப்பித்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே முன்னுரிமை என்பது […]
vijay highcourt

You May Like