பாமக மாநில இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகனும், லைக்கா சி.இ.ஓ.வுமான ஜி.கே.எம். தமிழ்குமரன் நியனம் செய்யப்பட்டுள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையில் கடந்த சில நாட்களாக கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதில் அளிக்க அவகாசம் வழங்கியது. ஆனால் அந்தக் காலக்கெடு முடிந்தும், அன்புமணியின் தரப்பில் பதில் எதுவும் வழங்கவில்லை.
அதனைதொடர்ந்து பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணியுடன் பாமகவை சேர்ந்த யாரும் எவ்வித தொடர்பும் வைக்க கூடாது. மனம் திருந்தி வரும் அன்புமணி ஆதரவாளர்களை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். அன்புமணியுடன் தொடர்பில் இருக்கும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த நிலையில், பாமக மாநில இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகனும், லைக்கா சி.இ.ஓ.வுமான ஜி.கே.எம். தமிழ்குமரன் நியனம் செய்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாக பாமக இளைஞரணி தலைவராக இருந்த தமிழ்க்குமரன் 3 மாதங்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதலே காரணம் என கூறப்பட்டது. தமிழ்க்குமரன் லைகா நிறுவனத்தின் இயக்குநராக இருந்ததோடு, சில படங்களை சொந்தமாகவும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
Read more: தம்பதிகள் சேர்ந்து வாங்கிய சொத்தில் கணவர் தனி உரிமை கோர முடியாது..!! – ஹைகோர்ட் அதிரடி..



