உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் தனது மகளைப் பலாத்காரம் செய்த ஓரினச்சேர்க்கை நண்பரின் ஆணுறுப்பை தந்தை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த 32 வயதான ஒரு நபர், தியோரியா மாவட்டத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய அறையில், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இவர்களுக்கு இடையேயான நட்பு நாளடைவில் வளர்ந்து, இருவரும் ஓரினச்சேர்க்கை பார்ட்னர்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஒருநாள் அந்த நபரின் 6 வயது மகள் தன் தந்தையை பார்க்க அந்த அறைக்கு வந்துள்ளார். அப்போது ராம்பாபு யாதவ், தனது பார்ட்னரின் மகள் என்றும் பாராமல், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் சில தினங்கள் கழித்து அந்தச் சிறுமியின் நண்பர் மூலம் தந்தைக்கு தெரியவந்துள்ளது. அடைக்கலம் கொடுத்து நண்பனாக்கிய நிலையில், தன் மகளையே சீரழித்ததை அறிந்த தந்தை கடும் கோபம் அடைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த அவர், ராம்பாபு யாதவுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, திடீரென ஒரு கத்தியை எடுத்து நண்பரின் ஆணுறுப்பை அறுத்து துண்டாக்கினார். இதனால் ராம்பாபு யாதவ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, தன் மகளின் நிலையை எண்ணி வேதனையில் இருந்த அந்த சிறுமியின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராம்பாபு யாதவ் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தற்போது தாய்வழி பாட்டியின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



