தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தது அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆட்டோ டிரைவர் தங்கமலை என்பது தெரியவந்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில், தெப்பம்பட்டியை சேர்ந்த 27 வயதுடைய அஜித் குமார் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் (14), விமல் (12), அறிவழகன் (15), மற்றும் செல்வ முருகன் (16) ஆகிய சிறுவர்கள் தங்கமலையை கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கமலை கடந்த சில மாதங்களாக சில சிறுவர்களிடம் பணம் கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இந்த தகவலை அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அஜித் மற்றும் சிறுவர்கள், தங்கமலையை கண்காணித்து, தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று, பள்ளி வளாகத்தில் தங்கமலை மற்றும் ஒரு சிறுவன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த 5 பேரும் அங்கு கிடந்த தென்னை மட்டைகள் மற்றும் கம்புகளை பயன்படுத்தி அவரை தாக்கியுள்ளனர். இதில், தங்கமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட எஸ்.பி. சினேக பிரியா அவர்களின் நேரடி கண்காணிப்பில், ஆண்டிப்பட்டி துணை சூப்பிரண்டு சிவசுப்பு தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, கைதான 5 பேரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வாய்க்குள் வெடிபொருள் வைத்த கள்ளக்காதலன்.. லாட்ஜில் சிதைந்து கிடந்த இளம்பெண் உடல்..!! இரு மாநிலங்களை உலுக்கிய சம்பவம்..!!